விஜய்யின் தேர்தல் வெற்றி ; இலங்கை நாடாளுமன்றத்தில் நகைச்சுவை விமர்சனம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் நாளைய தினம் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அரசியல் வட்டாரங்களில் விஜய்யின் வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்
இலங்கை நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், சிலர் அவரது அரசியல் வாக்குறுதிகளை விமர்சித்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், விஜய்யின் தேர்தல் வெற்றி மற்றும் அவரது வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “கச்சத்தீவை மீட்போம்” என்ற வாக்குறுதியை வழங்கி தமிழக மக்களின் வாக்குகளை பெற்றதாக விஜய்யை விமர்சித்தார்.
மேலும், “நாளை அல்லது நாளை மறுதினம் விஜய் கச்சத்தீவையும் கொண்டு செல்வாரோ தெரியவில்லை” என நகைச்சுவையாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காலத்தில் கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்டதை நினைவுகூர்ந்தும் அவர் கருத்து வெளியிட்டார்.
இந்த கருத்துக்கள் தற்போது இலங்கை மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
![]()