உலகம்

முடிவுக்கு வரும் போர் – ஈரானின் மறைமுக வௌிப்படுத்தல்!

ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைச் சூட்சுமமாகத் தெரிவித்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் முழுமையான அர்த்தம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஈரானிய விதிமுறைகளின்படி ஹோர்முஸ் நீரிணையை கடப்பதில் ஒத்துழைப்பு வழங்கிய கப்பல் உரிமையாளர்களுக்கு IRGC தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவதுடன், புதிய நடைமுறைகளின் கீழ், இந்த நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் நிலையான பயணத்திற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட ‘புரொஜெக்ட் ஃப்ரீடம்’ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணித்தியாலங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button