கச்சதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திடம் கொடுங்கள்

கச்சதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தமிழக மக்கள் எங்களை பாதுகாப்பார்கள் என்றும் யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது வடக்கில் தீவுப் பகுதிகளில் மின்சார விநியோகம் இல்லாமை தொடர்பில் கேள்வியெழுப்பி உரையாற்றுகையிலேயே அர்ச்சுனா எம்.பி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை தமிழன், அடக்கப்பட்ட தமிழன் என்ற தமிழ் குரலாக இந்த பாராளுமன்றத்தில் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் தீவுப் பகுதியில் பாதிக்கு பாதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அங்கு கிழமையில் 5 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது. இவ்வாறான நிலைமையில் கச்சதீவை விஜய் கேட்டிருக்கின்றார் என்பதற்காக கச்சதீவை தர மாட்டோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் கச்சதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்கச் சொல்கின்றோம். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள் என்றார்.
![]()