இலங்கை

வரலாற்றை மாற்றியவன்..! ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

அகில இலங்கை கம்பன் கழகத்தினர், 2026ஆம் ஆண்டுக்கான கம்பன் புகழ்” விருதினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கி கௌரவித்துள்ளனர்.

இனவேற்றுமையால் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக உறுதியளித்து, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று, சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதரித்து, நாட்டை நிர்வகித்து வரும் அநுர குமார திசாநாயக்கவைப் பாராட்டும் வகையில் கௌரவத்தினை வழங்குவதாக கம்பன் கழகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா – 2026இன் இறுதி நாள் வைபவம் கொழும்பில் நேற்று (3) மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது, அகில இலங்கை கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் உயரிய விருதான ‘கம்பன் புகழ்” விருதினை இவ்வாண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ‘வரலாற்றை மாற்றியவன்” என்ற புகழாரத்தோடு கழகத்தினர் வழங்கி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தின் முன்னாள் தலைவர் கு. அண்ணாமலையும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button