இலங்கை
நல்லூரில் தமிழ்த் தேசியப் பேரவையின் மேதின எழுச்சிப் பேரணி முன்னெடுப்பு

தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாடு செய்து நடாத்திய மேதின எழுச்சிப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (01) மாலை யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.
நல்லூர் சட்டநாதர்ச் சிவன் ஆலயத்தடியில் மேதின எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.
மேதின எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வு வேண்டும். 13 ஆம் திருத்தம், ஏக்கிய ராஜ்ய உட்பட ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்த வடிவிலான தீர்மானத்தையும் நிராகரிக்கின்றோமென வலியுறுத்தினர்.
![]()