இலங்கை
மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் தமிழரசுக் கட்சியின் மேதின நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதின நிகழ்வு முல்லைத்தீவு மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் மே தின நிகழ்வானது முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சந்தை வளாகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகியது.
நிகழ்வின் முன்னதாக மாங்குளம் பிரதான சந்தியிலிருந்து தமிழரசு கட்சியின் கொடிகளை ஏந்தியுமாறு பேரணியாக சந்தை வளாகத்தை வந்தடைந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் மற்றும் தலைவர் சீ. வி .கே .சிவஞானம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
![]()