தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு!

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. தவெகவின் அரசியல் வருகை இந்த தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பல விதமான விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டுள்ள நிலையில், வேட்பாளர்களை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து தேர்தல் முடிவுகளுக்காக தவெகவினர் காத்திருப்பில் உள்ளனர். மற்றொரு பக்கம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் ரிசல்ட்கள் வெளியாகி கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்காக அனைவரும் காத்திருப்பில் உள்ள நிலையில், தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இந்த சட்டமன்றம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தேர்தல் சம்பந்தமான பணிகளை கவனித்து வந்தனர் தவெகவினர். இந்நிலையில் இந்த அலுவலகம் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு அங்கிருந்து தவெக பதாகைகளும் கிழிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி தவெக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பாக எஸ். துரைராஜ் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து ஆர். மனோகரனும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக தர்மராஜ் என்பவரும் இந்த தொகுதியில் களமிறங்கியுள்ளனர். இதனிடையில் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேற்றைய தினம் தவெக வேட்பாளர்களை பனையூர் அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் தலைவரான விஜய் சந்தித்து பேசினார்.
அப்போது வேட்பாளர்களிடம் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பனையூர் கிளம்பி வந்து விட வேண்டுமென விஜய் உத்தரவிட்டுள்ளார். இரவு எவ்வளவு நேரமானாலும் இங்கு வர வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று கூறியிருக்கிறார். அதோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை பக்கத்தில் நின்று கண்காணிக்கவும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் விஜய்.
தேர்தலில் வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை பிற கட்சியை சார்ந்தவர்கள் விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். இதனை தடுப்பதற்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேட்பாளர்களுக்கு இந்த அறிவுரையை விஜய் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையில் சமீபத்தில் வெளியான எக்ஸிட் போல் ரிசல்ட்களில் பெரும்பாலான நிறுவனங்கள் விஜய் 20 – 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அவருடைய கட்சி 15 முதல் 20 சதவீதம் வாக்குகளை பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளரான செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதோடு விசில் புரட்சி நடந்து இருப்பதாகவும் அவர் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
![]()