இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்; இன்றும் முன்னெடுப்பு 

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் ஆரம்பமாகி மாலை-06 மணி வரை நடாத்தப்பட்டது.

நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், கட்டசியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன். மாஸ்ரர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பெளர்ணமி நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை-07 மணி தொடக்கம் மாலை-06 மணி வரையும் இதே கோரிக்கையை முன்வைத்துத் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *