இலங்கை

ஜனாதிபதி அநுர அரசால் தகர்க்கப்பட்ட நான்கு நிழல் இராஜியங்கள்…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது நான்கு பலமான நிழல் அரசியல் சக்திகளை வீழ்த்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேஷபந்து தென்னகோனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி பொலிஸ் சேவையை அரசியலற்றதாக்கியமை அதன் ஆரம்பக் கட்டம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பொதுப்பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பாக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.

மேலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் நிறைந்த நிர்வாகிகளை நீக்கியமை என்பன இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட நிழல் அரசின் அங்கங்கள் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமையானது “ரூபிகோன் நதியைக் கடப்பது” போல் ஒரு பாரிய தீர்மானமிக்க நடவடிக்கை போன்றது என சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் போன்றவர்கள் புராதன கதைகளில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டியிருந்தனர்.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது அதைவிடவும் பலமான ஒரு நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.

கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு முறைகேடாக அதிகாரத்தைச் செலுத்தி வந்தவர்களுக்கு எதிராக முறைப்படியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையிட்டு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *