தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஸ்டார்மர் – பேடனோக் இடையே கடும் கருத்து மோதல்!

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனோக் இடையிலான விவாதங்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற கடைசி ‘பிரதமர் கேள்வி பதில்’ (PMQs) நிகழ்வில், பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது அரசாங்கத்தின் சாதனைகளைத் தற்காத்துப் பேசிய அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனோக் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இதை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவி கெமி பேடனோக், ஸ்டார்மரின் அரசாங்கம் “ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த விவாதத்தின் போது, தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற வதந்திகள் குறித்துப் பேடனோக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பிரதமர் நேரடியாகப் பதிலளிக்கத் தவறியதையடுத்து, “நிதி அமைச்சர் பதவி முடிவுக்கு வந்துவிட்டது” (Chancellor is toast) எனப் பேடனோக் தெரிவித்தார்.
இருப்பினும், நிதி அமைச்சரின் பதவியில் மாற்றமில்லை எனப் பிரதமரின் செயலாளர் பின்னர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே எழுந்துள்ள இந்த நேரடி மோதல், வாக்காளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()