இலங்கை

யாருக்கு எதிராக அடுத்த நம்பிக்கையில்லா பிரேரணை? அரசுக்கு எதிராகவா? அநுரவுக்கு எதிராகவா?

திறைசேரியின் 2.5. மில்லியன் டொலர் நிதி கொள்கையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வர முடியுமென்றும், அந்த பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிராகவா? அல்லது நிதி அமைச்சர் அநுரகுமாரவுக்கு எதிராகவா? அல்லது நிதி முகாமைத்துவம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராகவா? கொண்டு வருவது என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பல மாதங்களாக இரகசியமாக வைத்திருந்துள்ளனர். நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருக்கின்ற போதும் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அறிவிக்காமை தொடர்பில் கேட்கும் போது சிறுபிள்ளைதனமான பதில்களையே வழங்குகின்றனர்.

இந்நிலையில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் ஹர்ஷன சூரியபெரும தகுதியற்றவரே. அவருக்கு தகுதியும் கிடையாது, அனுபவமும் கிடையாது. இதனால் அவர் பதவி விலக வேண்டும். அத்துடன் நிதி அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் பொறுப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இவர் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் நன்கு ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம்.

அத்துடன் இந்த விடயத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக்கூடிய விடயங்கள் உள்ளன. இதன்படி அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முழுமையாக அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வருவதா? அல்லது நிதி அமைச்சரான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகவா? அல்லது பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிதி முகாமைத்துவம் தொடர்பான பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு எதிராக கொண்டுவருவதா? என்பது தொடர்பில் நாங்கள் ஆழமாக கலந்துரையாடவுள்ளோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *