இலங்கை

யாழ். தையிட்டி விகாரை காணி விவகாரம் ; மீண்டும் அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை இன்று காலை  மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காணி உரிமையாளர்களுக்கு விசேட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி தமது பூர்வீகக் காணிகள் என்றும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி 17 காணி உரிமையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், உரிய ஆவணங்களை வைத்துள்ள 17 பேரின் காணிகளை அளவீடு செய்து, புதிய வரைபடங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 17ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள் அந்த பகுதிக்குச் சென்றிருந்தனர்.

எனினும், அங்கு தங்கியிருக்கும் பிக்கு ஒருவரால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய தினம் அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த இழுபறி நிலைக்கு மத்தியில், இன்று (28) மீண்டும் அளவீட்டுப் பணிகளைத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணி உரிமையாளர்கள் தங்களின் மூல உறுதிப்பத்திரங்களுடன் (Deeds) சம்பவ இடத்திற்கு வருகை தந்து, தத்தமது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *