உலகம்

ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறும் ; டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும் என்றும் ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்போது டொனல்ட் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில்,

எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது. வெடித்து சிதறினால் அதனை முன்பிருந்ததைபோல மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களிடம் வரலாம், எங்களை அழைக்கலாம். உங்களுக்கு தெரியும், தொலைபேசி வசதி உள்ளது. எங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு வசதிகள் இருக்கின்றன என்றும் டொனல்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button