உலகம்

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்துபசார நிகழ்வில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் கைது செய்ப்பட்டுள்ளதுடன் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தினையடுத்து அமெரின்ன ஜனாதிபதி டொனால்ட் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற பட்டதாரி மற்றும் மென்பொருள் உருவாக்குநர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இயந்திரவியல் பொறியியலில் இளநிலைப் பட்டமும், கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

கணினி விளையாட்டுகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், மூலக்கூறு வேதியியல் தொடர்பான ஒரு விளையாட்டை உருவாக்கியுள்ளார். விண்வெளியில் நடக்கும் போர் தொடர்பான புதிய விளையாட்டு ஒன்றை உருவாக்கி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிதேர்தலின் போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ{க்கு ஆதரவாக 25 டொலர்களை ஆலன் நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வயோதிபர்களுக்கான சக்கர நாற்காலிகளில் புதிய வகை பிரேக் முறையைக் கண்டுபிடித்ததற்காக ஒரு காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு இளம் விஞ்ஞானி, தற்போது பல நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க ஜனாதிபதியை தாக்க முயன்றது ஏன் என்பது குறித்துப் புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு படுகொலை முயற்சி இதுவா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகள் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

“உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்த இந்த விருந்தின் போது, பாதுகாப்புச் சோதனை நடைபெறும் இடத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது

இதனால் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மிக நெருக்கமான தூரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் இரகசிய சேவை அதிகாரி ஒருவர், தான் அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கியினால் உயிர் தப்பினார். அந்த அதிகாரியுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் புலனாய்வு விசாரணை சேவை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button