இலங்கை

ரணிலின் வீட்டுக்கு சி.ஐ.டி சென்றது தவறு;  ஐ.தே.க.கடும் கண்டனம் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுகாதார பாதுகாப்புடன் வீட்டில் இருக்கின்ற நிலையில், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியமையை தாம் கடுமையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவே இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருதய சத்திரசிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டில் இருக்கின்றார். அத்துடன் அவரின் மனைவியும் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கின்றார். இவ்வாறான நிலைமையில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்துகின்றனர். இவர்கள் இருவரும் சுகாதார பாதுகாப்புடன் வீட்டில் இருக்கின்ற நிலைமையில் இவ்வாறு விசாரணைக்காக அதிகாரிகள் சென்றது ஏற்றுக்கொள்ளக்கூடியது.

தேசிய மக்கள் சக்தியின் குறைபாடுகளை மறைத்துக்கொள்ள இவ்வாறு தீர்மானங்களை எடுக்க யோசனை முன்வைப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் மனைவியும் உடல் நிலைபாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர்களின் வீட்டுக்கு சென்றதை நாங்கள் கண்டிக்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *