உலகம்

இளவரசர் ஹரியின் கருத்துக்களை நிராகரித்த டொனால்ட் ட்ரம்ப்!

உக்ரேன் மோதல் குறித்த இளவரசர் ஹரியின் கருத்துக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததோடு, ஹரி இங்கிலாந்துக்காகப் பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

நேற்றைய (23) தினம் கீவ் பாதுகாப்பு மன்றத்தில் ஹாரி ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.

அந்த உரையில் ஹரி, உலகப் பாதுகாப்பில் அமெரிக்கத் தலைமை வகிக்கும் நீடித்த பங்கில், வொஷிங்டன் தனது சர்வதேச ஒப்பந்தக் கடமைகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மன்னர் சார்ள்ஸின் இளைய புதல்வரான ஹரி, உலக விவகாரங்கள் குறித்து அரிதாகப் பேசியபோது, ​​தான் ஒரு அரசியல்வாதியாக இங்கு வரவில்லை என்றும், மாறாக சேவையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட ஒரு சிப்பாயாகவும் ஒரு மனிதாபிமானியாகவும் வந்திருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

எனினும், இந்த உரையில் அவர் ட்ரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

எவ்வாறெனினும் உக்ரேனுக்கு மேற்கொண்ட திடீர் பயணத்தின்போது ஹாரி ஆற்றிய உரைக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர்களிடம்,

எனக்கு ஒன்று மட்டும் தெரியும், இளவரசர் ஹாரி ஐக்கிய இராச்சியத்திற்காகப் பேசவில்லை, இளவரசர் ஹாரியை விட நானே ஐக்கிய இராச்சியத்திற்காக அதிகமாகப் பேசுகிறேன் என்று நினைக்கிறேன்.

இருப்பினும், அவருடைய ஆலோசனையை நான் மிகவும் மதிக்கிறேன் – என்று கூறினார்.

2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனுக்கு ஹாரி மேற்கொள்ளும் மூன்றாவது பயணமான, அவரது இந்த முன்னறிவிப்பில்லாத விஜயம், அவர் தனது மனைவியான சசெக்ஸ் கோமாரியுடன் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்த சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *