உலகம்

ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் பணிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் வெடிபொருட்களை வைக்கும் எந்தவொரு ஈரான் படகுகள் மீதும் தாக்குதல் நடத்துமாறு தமது கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் போர்க்கப்பல்கள் எதுவும் இல்லை என்றும், அவர்களிடம் இருந்த 159 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டிய டொனால்ட் ட்ரம்ப், அந்தச் செயல்பாட்டைத் தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *