இலங்கை

கட்டுவாப்பிட்டிய குண்டுதாரியிடம் சலே பேசவில்லை:ஆதாரங்களை வெளிப்படுத்திய சட்டத்தரணி சன்ஜீவ

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய முகம்மது ஹஸ்தூனுக்கு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் அமைந்துள்ள இடம் தொடர்பிலான விபரங்களை கிரிட் லோகேசன் வழங்கியதாக சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த குற்றச்சாட்டு பொய்யானது என சட்டத்தரணி சன்ஜீவ வீரவிக்கிரம அதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி விளக்கமளித்துள்ளார்.

‘சுரேஷ் சலேவுக்கான நீதி’ என்தொனிப் பொருளில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

நாடு முழுதும் 20 ‘சேப் அவுஸ்’ ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய சஹ்ரான் குழுவினர் நாடு முழுதும் ‘சேப் அவுஸ்’ அதாவது புலனாய்வு பிரிவினர்கள் பயன்படுத்தும் சொல்லாகும்.

அதாவது தங்கியிருக்கும் இடமாகும். பாணந்துறை- தலுவகொட்டுவ- இல.394 ஏ 21 டொன் டேவிட் மாவத்தை உலம்பலம கட்டுவாப்பிட்டிய -நிந்தவூர் -சம்மாந்துறை -சாய்ந்தமருது -ஸ்பென் டவர் கல்கிஸ்ஸ- ஸ்பென் டவர் வெள்ளவத்தை-மல்வானை -எண்டேரமுல்ல-குளியாப்பிட்டிய -திரியாய வாழைச்சேனை – கட்டுபொத்த -குளியாப்பிட்டிய- எட்டிப்பொல – கொச்சிக்கடை- ஜனபத மாவத்தை – தலுவகொட்டுவ – பாணந்துரை -அட்டாளைச்சேனை போன்ற இடங்களாகும்.

இந்த தகவல்கள் எப்பிஐ நடத்தி வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள அதாவது இல.394 ஏ 21 டொன் டேவிட் மாவத்தை உலம்பலம கட்டுவாப்பிட்டிய என்ற குறித்த வீட்டை 2019 பெப்ரவரி 03 ஆம் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

அந்த வீட்டை பாதுகாப்பதற்காகவும் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.எப்பிஐ அவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை வெளியிடவில்லை.

ஏனென்றால் சாட்சியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலாகும்.கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்தே குண்டுதாரி சென்றுள்ளதாக எப்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்திற்கு அருகில் பல காலம் தங்கியிருந்த முகம்மது ஹஸ்தூனுக்கு சுரேஷ் சலே எதற்கு கிரிட் லொகேசன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *