உலகம்

ஈரான் உடனான போர் நிறுத்தம் காலவரையின்றி நீடிப்பு

நிறைவடைய இருந்த ஈரான் உடனான தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் காலவரையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் வேண்டுகோளை ஏற்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் , உள்கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்படும்

ஈரானியத் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை, ஈரான் மீதான எங்களது தாக்குதல்களை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்,” என டிரம்ப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போர் நிறுத்த நீடிப்பு அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அல்லது இஸ்ரேல் இதற்குச் சம்மதிக்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டாலும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரானியத் தலைமை பலவீனமடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்படும் எனவும் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. ஈரானிய பாராளுமன்ற சபாநாயகரின் ஆலோசகர் மெஹ்தி முகமதி தெரிவிக்கையில்,

“இந்த காலநீட்டிப்பு ஒரு திடீர் தாக்குதலுக்குத் தயாராவதற்கான அமெரிக்காவின் தந்திரம். அமெரிக்காவின் கடற்படை முற்றுகையே ஒரு இராணுவ ஆக்கிரமிப்புதான். இதற்கு ஈரான் விரைவில் பதிலடி கொடுக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *