இலங்கை
சீமானுக்கு ஆதரவாக நல்லூரில் பதாகை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் பாரிய பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் எதிர்வரும்-23 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சீமானின் முழு அளவிலான உருவப் படத்துடன் அவருக்கு ஆதரவாக நல்லூரில் பாரிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
![]()