உலகம்

பாலிகாஸில் பழமைவாய்ந்த ஹோட்டல் தீக்கிரை: திட்டமிட்ட சதி என பொலிஸார் சந்தேகம்!

வட அயர்லாந்தின் பாலிகாஸில் (Ballycastle) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆன்ட்ரிம் ஆர்ம்ஸ்’ (Antrim Arms) விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதிச் செயல் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாலிகாஸில் உள்ள முன்னாள் ‘ஆன்ட்ரிம் ஆர்ம்ஸ்’ விடுதியில் நேற்று இரவு 8:00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

1700-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் தீப்பற்றி எரிந்ததையடுத்து, அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேவேளை, விபத்தின் தீவிரம் காரணமாக 42 தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பல வீதிகள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.

இதேவேளை, இந்த தீ விபத்து தற்செயலாக நடக்கவில்லை என்றும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவம் (Arson) என்றும் வட அயர்லாந்து பொலிஸ் பிரிவு (PSNI) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டதால், அதன் பாதுகாப்பு கருதி ஒரு வருடத்திற்கு முன்பே அதனைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கட்டிடத்தை இடிப்பதற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்தினால் கட்டிடத்தின் கூரை முழுமையாக இடிந்து விழுந்துள்ளதோடு, அதன் கட்டமைப்பு மேலும் பலவீனமடைந்துள்ளது.

இந்தத் தீவைப்புச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *