இலங்கை

கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது

கொழும்பு – தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (17) தெஹிவளை, வைத்திய வீதியில் வைத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

74 வயதுடைய முதியவர் ஒருவரை நிலத்தில் தள்ளிவிட்டு, அவரது சட்டைப் பையிலிருந்த 2,100 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிரிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் முன்னெடுத்தனர்.

பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று (20) திங்கட்கிழமை கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *