பலதும் பத்தும்

வெள்ளரியுடன் இதை சேர்த்து சாப்பிடாதீங்க… உடலில் பிரச்சனையை கொடுக்குமாம்

வெள்ளரிக்காயுடன் எந்தெந்த பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை வெயில்
கோடை காலம் ஏற்பட்டுள்ள நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகமாகியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதிய வேளைகளில் வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலைகள் காணப்படும் நிலையில், இதிலிருந்து தப்பிக்க சில உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.

ஆம் உடம்பில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் உடலை குளிர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியமாகும். இதனால் இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, மோர் இவற்றினை எடுத்துக் கொள்கின்றனர்.

இதில் வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும், செரிமானத்திற்கும் உதவியாக இருக்கின்றது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடும் போது நீங்கள் சில தவறுகளை செய்வது கூடாதாம்.

வெள்ளரியுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது?

வெள்ளரிக்காயுடன் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். பலரும் பழங்களுடன் வெள்ளரியை சேர்த்து சாலட்டாக செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் பழங்கள் விரைவில் செரிமானமாகிவிடும் நிலையில், வெள்ளரிக்காய் செரிமானத்திற்கு நேரம் எடுக்கும். ஆகவே இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சனையை வழிவகுக்கின்றது.

தர்பூசணியை வாழைப்பழத்துடனும், மாம்பழத்துடனும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போன்று பால், தயிர் இவற்றுடனும் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. ஆகவே உப்பு சிறிதளவு எலுமிச்சை சாறுடன் தர்பூசணியை சாப்பிடுவது சிறந்தது.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து இரவில் செரிமானத்தை மெதுவாக்குவதுடன், காலையில் வாயு தொல்லை மற்றும் வயிறு உப்புசம் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். ஆகவே வெள்ளரியை மதியம் அல்லது மாலை வேளைகளில் சாப்பிடுவது சிறந்தது.

அதே போன்று ஒரே நேரத்தில் அதிகமான வெள்ளரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் உடலில் நீர்ச்சத்தின் சமநிலையின்மை ஏற்படுத்துவதுடன், சிலருக்கு தலைசுற்றல், பலவீனம் ஏற்படலாம்.

ஆக மொத்தம் வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக காணப்பட்டாலும், சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிடுவதே உடம்பிற்கு முழுபலனை அளிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *