அபிவிருத்தியில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சியை விமர்சிப்பதில் ஜனாதிபதி நேரத்தை செலவிடுகிறார்

பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் அபிவிருத்தி பணிகளில் கவனம் செலுத்தாமல் பெரும்பாலான நேரத்தை எதிர்க்கட்சியினரையும் சஜித் பிரேமதாசவையும் விமர்சிப்பதிலேயே செலவிட்டு வருகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கதின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,பயண வழிகாட்டி
இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, மகாவலி திட்டம், 10 இலட்சம் வீடுகள் திட்டம், கொழும்பு துறைமுக வளர்ச்சி, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்புரட்சி போன்றவற்றைத் தகுதியான அமைச்சர்களிடம் ஒப்படைத்து நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி எந்தவொரு முறையான நிர்வாகத் திட்டமுமின்றி, தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிக்கொண்டு மட்டுமே வேலையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழ், நிதி அமைச்சில் இதுவரை 2.5 மில்லியன் டொலர்களும், தனியார் வங்கியில் 14 பில்லியன் ரூபா காணாமல் போயுள்ளது. மேலும், காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான மற்றும் பிணைமுறி வர்த்தகத்தில் தொடர்புடைய ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், கெஸ்பேவ பகுதியில் நடத்தப்பட்டக் கூட்டமொன்றில், கிராம மட்டத்தில் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்போரின் பெயர் பட்டியலைச் சேகரிக்குமாறு உறுப்பினர்களிடம் கோரப்பட்டுள்ளதாகவும், இது அபிவிருத்தியை நோக்கியதாக இல்லாமல் அடக்குமுறையை நோக்கிய நகர்வாகவே உள்ளது.தீவுகள் ஆராயுங்கள்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 18.74 பில்லியன் ரூபா இலாபத்துடனும் நிதி வைப்புகளுடனும் இயங்கிவரும் போதிலும், குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான குளோரின் மற்றும் அலுமினியம் போன்ற இரசாயனப் பொருட்களின் இருப்பு தற்போது முற்றாகத் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது.
அம்புத்தலை பரிசோதனைக்கூடம் மூலமான வழக்கமான தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் தவிர்க்கப்பட்டு, நேரடியாகவோ அல்லது காலாவதியான இரசாயனங்களையோ பயன்படுத்தும் சூழல் உருவானால், அது மக்களின் சுகாதாரத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியும். அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு புதிய குளோரின் இருப்புக்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
மேலும் கண்டறிக
செய்திகள் வாசி
முக்கிய செய்திகள்
இணையதள சந்தா
ஹம்பாந்தோட்டை சீனாபேக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், அடானியின் 434 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் மற்றும் 331 மில்லியன் டொலர் மதிப்பிலான சீன முதலீட்டுத் திட்டம் ஆகிய முக்கிய வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளன.
அதேபோல், 1 பில்லியன் ரூபா நிலக்கரி ஊழல் மற்றும் 323 கொள்கலன்கள் விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திலும் பல்கலைக்கழகங்களிலும் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளனர். மேலும், பொலன்னறுவை பகுதியில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லுக்குக் கிலோவுக்கு 120 ரூபா கூடக் கிடைக்காமல் பெரும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
பாராளுமன்றச் சபாநாயகருக்கு எதிராக 50 காரணங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 காரணங்கள் பாராளுமன்றக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் தனக்காகவும் தனது செயலாளருக்காகவும் சட்டவிரோதமான முறையில் 3 உத்தியோகபூர்வ இல்லங்களைப் பராமரித்து வருவதுடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரும் தகவல்களை பாராளுமன்ற ஊழியர்கள் வழங்கக் கூடாது எனத் தடுத்தும் வருகிறார். இதனால் அவர் மீது ஊழல் விசாரணைகள் நிலுவையில் காணப்படுகிறது.
![]()