ஜனாதிபதி உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு; எங்கள் ஆட்சியில் நடக்கும்- சஜித் தரப்பு எம்.பி

நிலக்கரி இறக்குமதி மோசடிக்கு ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும். இதனால் எங்களது அரசாங்கம் அமைந்ததுடன் முதல் வேலையாக இந்த மோசடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் எதிராக வழக்குகளை தொடர்ந்து அவர்களுக்க தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்பாவலவில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாற கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிலக்கரி மோசடி குற்றச்சாட்டு விடயத்தில் அமைச்சர் பதவி விலகினால் மட்டும் பிரச்சினை முடிந்துவிடாது. 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஊழல் நடந்துள்ளது. இதற்கு அமைச்சராக பதவி வகித்த குமார ஜயக்கொடி மாத்திரம் அன்றி ஜனாதிபதி அநுரகுமாரவும் பொறுப்புக் கூற வேண்டும். இந்த விடயத்தில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்ததும் முதல் விடயமாக ஜனாதிபதி அநுரகுமார, குமார ஜயக்கொடி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் கொள்கைக்கு எதிரான வழங்கு தொடர்ந்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
![]()