பலதும் பத்தும்

கலிபோர்னியாவில் நடந்த வினோதத் திருட்டு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இர்வின் (Irvine) பகுதியில், சுமார் 34,000 டாலர் மதிப்பிலான ‘லெகோ’ பொம்மைகளைத் திருடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

28 வயதான ஜாரெல் அகஸ்டின் என்ற நபர், அமெரிக்கா முழுவதும் உள்ள ‘Target’ அங்காடிகளில் இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளார்.

இவர் லெகோ பெட்டிகளில் இருந்த விலையுயர்ந்த பொம்மைகளை எடுத்துக்கொண்டு, அந்தப் பெட்டிகளின் எடையைச் சரியாகக் காட்டுவதற்காக உள்ளே உலர்ந்த ‘பாஸ்தா’ (Pasta) துண்டுகளை நிரப்பி மீண்டும் கடைகளிலேயே வைத்துவிடுவார்.

இந்தச் சம்பவம் குறித்து இர்வின் காவல்துறையினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளனர்.

“நாங்கள் விளையாட்டாகச் சொல்லவில்லை, கோதுமை செமோலினா பாஸ்தாவை வைத்துதான் இந்தத் திருட்டு நடந்துள்ளது” என்று கூறியுள்ள அவர்கள், “திருடனின் திட்டம் ‘அல் டென்டே’ (Al dente – சரியாக வெந்த பாஸ்தா) போலச் சமைக்கப்பட்டுவிட்டது” எனக் கிண்டல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே மாதிரியான திருட்டுகள் நடப்பதாகப் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்பின்னர் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், அந்த நபரை அடையாளம் கண்டு கலிபோர்னியாவின் பாராமவுண்ட் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

அவரிடமிருந்த லெகோ பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *