இலங்கை

ஊடக நிறுவனம் ஒன்றின் போலி செய்திக்கு 10 பில்லியன் நஷ்டஈடு கோரி கடிதம்!

கே.டி. லால் காந்தவுக்கு 46 கோடி ரூபாவிற்கும் அதிகமான பல சொத்துக்கள் இருப்பதாக ஒரு சில பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனையடுத்து, தமக்கு அதிக சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த பிரதான ஊடகம் ஒன்றிற்கு எதிராக அவர் இன்றையதினம்(18.4.2026) நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொய்யான தகவல்களை வெளியிட்ட ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்யக் கோரியும், 10 பில்லியன் இழப்பீட்டை வழங்குமாறும் லால் காந்த கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குறித்த ஊடக நிறுவனம் அவரது 2025ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையை தவறாக காண்பித்து இருப்பதாகவும், அவதூறான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமக்கான சொத்து மதிப்பு ரூபா 460 மில்லியனைத் தாண்டியது என்ற தலைப்பபின் கீழ் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் மீண்டும் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *