இலங்கை

ஜே.வி.பியின் மே தின நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்பு

இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின (மே தினம்) கொண்டாட்டங்களை மாவட்ட மட்டங்களில் நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (jvp) தீர்மானித்துள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டத் தலைவர்களின் தலைமையில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

விசேடமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாவட்ட மட்டங்களில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதுடன் ஜே.வி.பி.யின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க கொழும்பில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *