இலங்கை

“மதங்கள் வேறு – மனிதம் ஒன்று” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் சர்வமத மாநாடு!

“மதங்கள் வேறு – மனிதம் ஒன்று” எனும் மகுட வாசகத்துடன், சமுதாயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்வமத மாநாடு யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

‘சொன்ட்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்நிகழ்வில் தலைமை உரையாற்றினார். இதன்போது, பல்வேறு மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மனிதநேயத்தின் அவசியத்தையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி பிரம்மஹீ ச. பத்மநாபன், அருட்தந்தை எம். செல்வரட்ணம் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மௌலவி எம். றமீழ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாகச் சர்வ மதங்களின் விழுமியங்களை வெளிப்படுத்தும் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கேறின. அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரைகளை ஆற்றிய சர்வமதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

மத ரீதியான முரண்பாடுகளைக் களைந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் சமூகங்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்த மாநாடு மிகத் தெளிவாகப் பறைசாற்றியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *