இலங்கை

குமார ஜயகொடியின் பதவி விலகலை வரவேற்று அரசாங்கத்தை சாடிய சுமந்திரன்!

வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் அமைச்சரைப் பாதுகாத்து அவரைப் பதவியில் தக்கவைப்பதற்காக வாக்களித்தமை தொடர்பில் அரசாங்கத்தையும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை நிர்வாகமே ஒப்புக்கொண்ட பின்னரும், அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைத் தொடர்ந்து பாதுகாத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுமந்திரன் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *