இலங்கை

உணர்வோடு இரண்டறக் கலந்த குமுதினியை வீதி அபிவிருத்தி அதிகார சபை தூக்கி எறிந்துள்ளது – நெடுந்திவு மக்கள் வேதனை!

நெடுந்தீவு மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த குமுதினியை வீதி அபிவிருத்தி அதிகார சபை பாராமுகமாக தூர எறிந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்தி முன்னெடக்கப்படவுள்ள ‘கவனயீர்ப்பு போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழு நெடுந்தீவின் கடல் போக்குவரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய பாரிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை  முன்னெடுத்த குறித்த குழு மேலும் கூறுகையில் –

குமுதினி வடதாரகை நெடுந்தாரகை ஆகிய மூன்றுகடற் கலன்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரியதாகும். அதில் வடதாரகை திருத்த வேலைக்காகக் கொண்டு சென்றுள்ள நிலையில் நெடுந்தாரகை பழுதடைவது மீண்டும் ஓடுவது என நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

50 வருடுங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்ட குமுதினி கடந்த மூன்று மாதங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது தொடக்கம் இன்று வரை நான்கு தடவைக்கு மேல் குமுதினி திருத்த வேலைக்காகக் கொண்டு செல்லப்பட்டு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்த வேலைகளில் ‘எஞ்சின்’ மாற்றுதல் போன்ற பாரிய மாறுதல்கள் ஏதும் இதுவரை இடும்பெறவில்லை. நெடுந்தீவு மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த குமுதினியை வீதி அபிவிருத்தி அதிகார சபை பாராமுகமாக தூர எறிந்துள்ளது. இச்செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இது தவிர நாளாந்தம் 100 பேருக்கும் அதிகமான அரச ஊழியர்கள் நெடுந்தீவுக்கு வருகை தருகின்றனர். ஊர் மக்கள் நாளாந்தம் பயணம் செய்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தனியார் படகுகளும் இங்கு பலமான நிலையில் இல்லை.

எனவே கடற்போக்குவரத்தில் திருப்பதியான சேவையை வழங்க வேண்டிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பற்ற மனிதாபிமானமற்ற செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு துறைமுகத்திலும் கப்பல்களிலும் பயணம் செய்யும் எமது மக்கள் இம்சிக்கப்படும் செயலை வெறுக்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *