இலங்கை

கடற்படை முகாமின் கம்பி கூட்டுக்குள் மோசமான நிலையில் பிள்ளையான் – பகீர் தகவல்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிள்ளையான்  சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மேலதிக விசாரணைக்காக அவர் வெலிசறை கடற்கரை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிள்ளையான் கிழக்கு மாகாண மக்களை பாதுகாக்கவும் நன்மை செய்ய வந்தவரும் என்றால், அவர் ஏன் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படவில்லை என்ற சந்தேகம் தற்போது மக்களிடையே எழ ஆரம்பித்துள்ளது.

வதை முகாம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு உள்ளதாக குற்றப்புலனாய்வு துறை உறுதிப்படுத்திய பின்னரே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் வெலிசறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட தகவல் எவ்வாறு வெளியானது என்ற கேள்வியும் எழுகிறது. இதன் மூலம் பிள்ளையானுக்கு ஆதரவாக புலனாய்வு பிரிவில் ஆட்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது.

பிள்ளையான் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்? அவருக்கு பின்னால் ஏதேனும் சதி திட்டம் நடைபெறுகிறதா? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை எமது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி மேலும் ஆழமாக ஆராய்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *