இலங்கை

ராஜபக்சக்கள் மற்றும் சஜித் தரப்பினரின் தோல்வி கண்ட எதிர்பார்ப்புகள்!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி நாடு முழுவதும் ஒரு குழப்பமான சூழல் உருவாகும் என ராஜபக்சக்கள் மற்றும் சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்ட கனவு முற்றாகத் தகர்ந்து போயுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மத்திய கிழக்கு போர் காரணமாக நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என நம்பினர்.

அத்தோடு புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சியின் சில தரப்பினர் அச்சத்தை ஏற்படுத்த முயன்றனர்.

இருப்பினும் நாடு முழுவதிலுமுள்ள ஊடகவியலாளர்களின் தகவல்களின்படி, மக்கள் இந்த புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடனும் அதிகப்படியான பங்கேற்புடனும் கொண்டாடியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பிரசாரம் செய்வதில் சஜித் பிரேமதாச நேரடியாகத் தலையிட்ட போதிலும், அந்த முயற்சியும் முழுமையாகத் தோல்வியடைந்தது. டித்வா சூறாவளியினால் 4,100 மில்லியன் டொலர் பெறுமதியான பாரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மத்திய கிழக்கு போர் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையிலும் அதன் பாதிப்புகள் மக்கள் மீது சுமத்தப்படவில்லை.

அவற்றைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக நடுநிலையான விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *