உலகம்
பில்லியன் கணக்கான டொலர் வரிப்பணத்தை மீள செலுத்தவுள்ள அமெரிக்க அரசாங்கம்

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரிப்பணத்தை மீள வழங்குவதற்கான விசேட நடைமுறையை அமெரிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், இறக்குமதியாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சில வரிகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க உயர நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்கள் செலுத்திய வரிப்பணத்தை மீண்டும் வழங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.
![]()