இலங்கை

சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பில் தெளிவில்லை; நிலமிழந்த மக்கள் அவசர கலந்துரையாடல்!

தையிட்டி நிலங்களை அளவிட்டு விடுவிப்பதாக அமைச்சர் சந்திரசேகரன் (11.04.2026) அறிவித்தாலும், அங்குள்ள சட்டவிரோத விகாரையின் நிலை குறித்துத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில், அதன் பின்னணி குறித்த கலந்துரையாடல் ஒன்று பல்தரப்பட்டவர் பிரசன்னத்துடன் (15) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ் தந்தை செல்வா அரங்கில் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையினால் நிலமிழந்த மக்களால் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது பேச்சுவார்த்தைக்கு மத்தியில் விகாரையைப் பதிவு செய்யும் முயற்சிகளும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன்

குறிப்பாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறினாலும் அது இன்னமும் முறைப்படி வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது

அத்துடன் அரசின் மறைமுக உள்நோக்கங்களையும் சதித்திட்டங்களையும் புரிந்துகொண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை மீட்கப் பின்பற்ற வேண்டிய எதிர்கால அணுகுமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் அமைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *