இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரிமலை ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் தமிழ், சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகளும், பூஜைகளும் பூசகர் மதிமுக ராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பெருந்திரளான பொதுமக்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.

இதேவேளை நாடளாவிய ரிதியில் உள்ள ஆலயங்களிலும் தமிழ், சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகளும், பூஜைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *