இலங்கை

சட்டத்தின் முன் சகலரும் சமம்! 10 வருடங்களின் பின்னர் அடிபணிந்த மகிந்த

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது சொத்து மற்றும் கடன்கள் தொடர்பான பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட விபரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.

அவர் தனது சொத்து விபரங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். 2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, தனது சொத்து விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மகிந்த ராஜபக்வுக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க இந்த கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த 10 வருடங்களில் மகிந்த ராஜபக்ச 10 வருடங்களாக அதனை இழுபறியில் நிலையில் வைத்திருந்தார்.

ஆனால் அநுர ஆட்சியில் தனது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளார்.

அது தொடர்பான விடயங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகி்னறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *