இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; 25 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த வருடத்திற்குள் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 25 குற்றவாளிகளுக்கு எதிராக மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் தினசரி விசாரணைகள் நடைபெறுவதுடன் அதன் தீர்ப்பு இந்த வருடத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாததத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

குண்டுத் தாக்குதல்களில் அரசியல் வேண்டியத் தேவை எமக்கு கிடையாது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் நாளாந்தம் விசாரணைகள் இடம்பெறுகின்றன. 25 குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன .இந்த ஆண்டுக்குள் தீர்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விசாரணைகள் தற்போது சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

பிரதான சூத்திரதாரி உள்ளார். ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்கு செய்த சூழ்ச்சி என்ற கருத்தும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. உதய கம்மன்பில அணியும் அன்று அந்த பக்கம் தான் இருந்தது. வுவுனத்தீவு பொலிஸார் படுகொலை விவகாரம் திட்டமிட்ட வகையில் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

சுரேஸ் சலே கைது செய்யப்பட்டவுடன் ராஜபக்‌ஷ அணியினர் கலக்கமடைந்துள்ளார்கள். நூல் வெளியிடுகிறார்கள்.சஜித் பிரேமதாச நூல் வெளியீட்டுக்கு இயல்பாக சென்றாரா அல்லது பிரதான சூத்திரதாரியுடன் தொடர்புக் கொண்டுள்ளாரா என்பது தெரியவில்லை.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம் பெறுகின்றன. உண்மைகள் வெகுவிரைவில் வெளிவரும் என்பதை மக்களுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம்.நீதிமன்றம் உண்மையை வெளிப்படுத்தும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *