இலங்கை

அனைத்தையும் பகிரங்கப்படுத்த தயார்!; மகிந்த அதிரடி அறிவிப்பு

தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, தனது சொத்து விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க உரிய ஆவணங்களை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *