உலகம்

உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் முன்னதாக போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியிருந்தாலும், லெபனானை உள்ளடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

ஆனாலும், ஈரான் மற்றும் இந்த பேச்சுவார்த்தைக்கு உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர்,
அந்த ஒப்பந்தம் லெபனானையும் உள்ளடக்கியது என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, லெபனானில் இஸ்ரேல், ஈரானுடன் தொடர்புடைய ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *