உலகம்

15,000 ஏவுகணைகள் & 45,000 ஆளில்லா வானூர்திகள்; ஈரான் மிரட்டல்

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தற்போதைய மோதலில் தாங்களே வெற்றி பெற்று வருவதாக நம்புவதாக ஈரான் தெரிவித்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில், இன்னும் 15,000 ஏவுகணைகள் மற்றும் 45,000 ஆளில்லா வானூர்தி தயார் நிலையில் இருப்பதாக மத்தியஸ்தர்களிடம் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முயன்று வரும் வேளையில், தனது பலத்தை உறுதிபடத் தெரிவிப்பதன் மூலம் பேச்சுவார்த்தைகளில் மேலோங்கிய நிலையில் இருக்க ஈரான் முனைவதாகத் தெரிகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *