உலகம்

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை

பிரித்தானியாவில் வசிக்கும் தஞ்சம் கோருவோர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் வழங்கிய 40,000 பவுண்டுகள் சலுகை குறித்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை.

இத்திட்டத்தை எத்தனை சதவீத மக்கள் ஏற்றுக்கொண்டனர், எத்தனை பேர் நிராகரித்தனர் என்ற விவரங்களை வெளியிட உள்துறைச் செயலாளர் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோரின் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக சுமார் 158,000 பவுண்டுகள் செலவில் விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்தோர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறைச் செயலாளர் ஒரு குடும்பத்திற்கு 10,000 பவுண்டுகள் மற்றும் விமான டிக்கெட்டை வழங்க சலுகை அறிவித்திருந்தார்.

மார்ச் ஐந்தாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை, புலம்பெயர்ந்தோர் இந்த சலுகை குறித்து முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டனர், எனினும், தற்போது அந்தச் சலுகை காலாவதியாகிவிட்டமையும் குறிப்பிடத்தககது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *