உலகம்

இங்கிலாந்தில் திட்டம் 2 மாணவர் கடன் வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பு

பிரித்தானியாவில் மாணவர் கடன்களுக்கான வட்டி ஆறு வீதமாக கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்க அபாயத்திலிருந்து பட்டதாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திட்டம் இரண்டு மற்றும் முதுகலைப் பட்டக் கடன்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 2012 முதல் ஜூலை 2023 வரை இங்கிலாந்தில் வழங்கப்பட்டு, வேல்ஸில் தற்போதும் வழங்கப்பட்டு வரும் திட்டம் 2 மாணவர் கடன்களுக்கு, 2026-27 கல்வியாண்டிற்கான இந்த உச்சவரம்பு பொருந்தும்.

இது திட்டம் மூன்று அல்லது முதுகலைப் பட்டக் கடன்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சவரம்புகள் கடன் வாங்குபவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பை வழங்கும் எனவும் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *