சஜித் வெட்கப்பட வேண்டிய பல தகவல்கள் அம்பலமாகும்; அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெட்கப்பட வேண்டிய இன்னும் பல விடயங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பிரதான பஸ் நிலையத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வசந்த சமரசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தார். எதிர்கட்சித் தலைவராகவும் சஜித் பிரேமதாச இருந்தார். அந்தக் காலத்தில் அவர்கள் செய்த வேலைகளுக்கும், தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, இது தொடர்பில் விசாரணை நடத்துவது யாரென கூறுமாறு மக்களிடம் கேட்கின்றோம்.
சஜித் பிரேமதாச வெட்கப்பட வேண்டிய விடயங்கள் பல இன்னும் இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை வெளியில் வரும். அவர் இருந்த அரசாங்கம் செய்த ஊழல் மோசடிகள் தொடர்பிலும் தெரியவரும். அப்போது இவர்களின் அரசாங்கமே இருந்தது. இப்போது நடப்பவற்றை பார்க்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நடக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகவே இருக்கின்றது. இப்போது
புத்தகங்கள் எழுதும் போதும் உண்மை என்னவென்று கம்மன்பில போன்றவர்களுக்கு தெரியும். அந்த புத்தகங்களை அவரே வாசிக்க வேண்டும். சட்டத்தின் முன்னால் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டுவரப்படுகின்றனர்.
![]()