முச்சந்தி
வளைகுடா போரில் அமெரிக்கா பின்னடைவு… நிஜமான பலத்தை நிரூபிக்கும் ஈரான்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானின் ராணுவக் கட்டமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேளையிலேயே அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.தெஹ்ரானின் படைத்திறன் பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கள நிலவரத்தை வெளிப்படுத்தி உள்ளன. பென்டகனின் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்தால் அமெரிக்க போரியல் வரலாற்றில் பாரிய பின்னடைவு சந்திக்கும்)
கடந்த ஐந்து வாரங்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனால் ஈரானின் நிஜமான ராணுவ பலம் தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது. வீழ்த்தப்படும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதனை விட ஈரானிடம் இன்னும் ஐம்பது வீதமான ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையினால் பென்டகனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கை தோல்வி?
மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்த வேளையிலேயே அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஈரானின் ராணுவக் கட்டமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கள நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்கத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் குறையாத ஈரானின் ராணுவ பலம் குறித்த உளவுத்துறைத் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த அம்பலமான உண்மைகளால் வெள்ளை மாளிகை சொன்னது ஒரு பக்கம், உளவுத்துறை சொல்வது மறுபக்கம் என ட்ரம்ப் அரசின் பித்தலாட்டம் தெரிய வந்துள்ளது. ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் முழங்கி வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறையின் புதிய மதிப்பீடுகள் (Intelligence Assessments) அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன. ஈரான் அடியோடு சிதைந்துவிட்டது என்ற ட்ரம்பின் வாதத்திற்கு இந்த அறிக்கை ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

ஈரான் மீது பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசிய போதிலும், ஈரானிடம் இன்னமும் அதன் சரிபாதி ஏவுகணைத் தளங்களும், பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்களும் (Drones) எவ்விதச் சேதமுமின்றிப் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் கூற்றுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை இது காட்டுகிறது.
ஈரான் தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்கும் கட்டத்திற்கு மிக நெருக்கமாக சென்று விட்டதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 நாட்கள் சண்டையிட்டது. அதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் பொருளாதார சீர்குலைவால் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஈரானில் தலைமையை மாற்றுவதற்காக மீண்டும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி ஈரான் மீது போர் தொடுத்தது.
போரின் முதல் நாளிலேயே ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையிலும், அமெரிக்காவிடம் ஈரான் பணியவில்லை. அத்தோடு இஸ்ரேல் மீது மட்டும் பதில் தாக்குதல் நடத்தாமல், ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் அரபு நாடுகள் அதிர்ச்சி அடைந்தன.
மேலும், எண்ணெய், எரிவாயுவின் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உலக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் எங்கள் இலக்குகளை முழுமையாக எட்டும் வரை போர் தொடரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரானின் நிஜமான ராணுவ பலம்
வாரக்கணக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களையும் மீறி, ஈரானிடம் இன்னும் வான் பாதுகாப்பு ஏவுகணை ஏவுதளங்கள் (Missile Launchers) பத்திரமாக இருப்பதாக உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் ட்ரோன் (UAV) பலம் அடியோடு முடக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போதும் ஈரானிடம் ஆயிரக்கணக்கான தற்கொலை ட்ரோன்கள் (Kamikaze Drones) தயார் நிலையில் உள்ளன. அதன் ட்ரோன் தளங்கள் இன்னும் அப்படியே உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானிடம் மிகக் குறைந்த ஏவுகணைகளே மிச்சமுள்ளன்என ட்ரம்ப் சொன்னார். அத்துடன் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத் ஈரானின் பலம் 90% குறைந்துவிட்டது என்றார். ஆனால், உளவுத்துறையின் இந்த புதிய அறிக்கை, அமெரிக்கத் தலைமைக்கு ஒரு மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை அமெரிக்க வீசிய போதிலும், ஈரானிடம் இன்னமும் அதன் சரிபாதி ஏவுகணைத் தளங்களும், பெரும் எண்ணிக்கையிலான ஆளில்லா விமானங்களும் (Drones) எவ்விதச் சேதமுமின்றிப் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் கூற்றுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை இது காட்டுகிறது.
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தின் (Pentagon) கணக்கின்படி இதுவரை ஈரானில் சுமார் 12,000 இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரானின் எதிர் தாக்குதல் திறன் 90 வீதம் குறைந்துள்ளதாகவும், ஈரானின் வான்பரப்பில் அமெரிக்கா முழு ஆதிக்கத்தைச் செலுத்துவதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பெருமிதம் தெரிவித்தது.
ஈரானின் எதிர் தாக்குதல் திறன்:
வான்வழி ஆதிக்கம் ஒருபுறமிருந்தாலும், இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஈரானின் வெளிப்படையான ஏவுகணைத் தளங்கள் பல இன்னும் செயல்படுவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். இவை தவிர, கண்டுபிடிக்க முடியாத பிரம்மாண்டமான நிலத்தடிச் சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகள் மற்றும் நடமாடும் ஏவுகணைத் தளங்களை அழிப்பது இரு நாட்டுப் படைகளுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

கடல்வழிப் போரைப் பொறுத்தவரை, ஈரானின் அதிகாரப்பூர்வக் கடற்படை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்கா தெரிவித்தாலும் , ஈரானியப் புரட்சிகரப் படையின் (Revolutionary Guards) வசம் இன்னும் நூற்றுக்கணக்கான அதிவேகப் படகுகளும், கடல்வழி ஆளில்லா விமானங்களும் பெரும் ஆயுத பலமாக இருக்கின்றன .
ஈரானின் மேலோட்டமான நகல் இராணுவக் கட்டமைப்புகளையே அமெரிக்காவும் இஸ்ரேலும் அழித்துள்ளன. அதன் உண்மையான மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் இன்னும் இரகசியச் சுரங்கங்களில் உள்ளதாக போர் முனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப்பின் விதண்டாவாத பேச்சு:
ஈரான் கடற்படையை அழித்து விட்டோம். ஈரானுக்கு அணு ஆயுதங்கள் இல்லை. அணு ஆயுதங்கள் தயாரிக்க மாட்டோம் என ஈரான் உறுதி அளித்துள்ளது. ஈரான் தலைவர்களில் பெரும்பாலோர் பயங்கரவாதிகள், இப்போது இறந்துவிட்டனர். ஈரான் ராணுவத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன, ஈரானிடம் மிக குறைவான ஏவுகணை ஏவுதளங்களே எஞ்சியுள்ளன என ட்ரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தனது இலக்குகளை மிக விரைவில் எட்டும். ஈரான் தோற்றால் ஹார்முஸ் நீரிணை தானாக திறந்துவிடும். ஈரான் போரில் நான் எப்போதும் ராஜதந்திர பாதையையே விரும்பினேன். எந்த சூழலிலும் ஈரான் அணு ஆயுதங்களை பெற அனுமதிக்க முடியாது. தீவிரவாத சக்திகளிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத அச்சுறுத்தல் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம். அமெரிக்காவின் எரிசக்தி தேவை மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்திருக்கவில்லை. அமெரிக்கா தனது இலக்குகளை மிக விரைவில் எட்டும், அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது.
அமெரிக்கா எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாறியுள்ளது. மில்லியன் கணக்கான பீப்பாய்களை உற்பத்தி செய்து வருகிறோம். ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் சேர்ந்து எவ்வளவு உற்பத்தி செய்யுமோ, அந்தளவிற்கு நாம் உற்பத்தி செய்கிறோம். அமெரிக்காவின் எரிசக்தி தேவை மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்திருக்கவில்லை.
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கியதே விலை உயர்வுக்கு காரணம். இது தற்காலிகமானது தான். ஹார்முஸ் நீரிணையை நேரடியாக கைப்பற்றி பாதுகாக்க வேண்டும். வளைகுடாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் தைரியம் காட்ட வேண்டும். ஹார்முஸை மீட்க மற்ற நாடுகளின் நேரடி நடவடிக்கை தேவை.
தற்போது அமெரிக்காவிடம் போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் உள்ளது. நாங்கள்
வளைகுடா நாடுகளை சார்ந்திருக்கவில்லை. ஆனால் அங்கிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் ஹார்முஸை கைப்பற்றி தைரியமாக, நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எளிமையான விஷயம்தான். இல்லையென்றால் எங்களிடம் எரிசக்திகளை வாங்குங்கள். எங்களிடம் ஏராளமாக உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் அடுத்த 2, 3 வாரங்கள் ஈரானை மிகக் கடுமையாக தாக்குவோம். அனைத்து வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. ஈரானிடம் எதுவும் இல்லை.
வளைகுடா நாடுகளை சார்ந்திருக்கவில்லை. ஆனால் அங்கிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் ஹார்முஸை கைப்பற்றி தைரியமாக, நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது எளிமையான விஷயம்தான். இல்லையென்றால் எங்களிடம் எரிசக்திகளை வாங்குங்கள். எங்களிடம் ஏராளமாக உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் அடுத்த 2, 3 வாரங்கள் ஈரானை மிகக் கடுமையாக தாக்குவோம். அனைத்து வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. ஈரானிடம் எதுவும் இல்லை.இப்படி எல்லாம் பேசிய ட்ரம்ப்பின் உரைக்கு மாறாக, அமெரிக்காவையே அதிரவைக்கும் புதிய உளவுத்துறை அறிக்கை வெளியாகியுள்ளது. ஈரானின் பலத்தைப் பற்றி ஜனாதிபதி ட்ரம்ப் உலகிற்கு தவறான தகவலைத் தெரிவித்து வருகிறார். இன்னும் பாரிய ராணுவ பலம் ஈரானிடம் நிலையில், ட்ரம்ப் சொன்ன காலக்கெடு சாத்தியமா என்பது சந்தேகமே. உளவுத் துறையின் இந்த அறிக்கை வெளியான பிறகு, கச்சாய் எண்ணெய் விலை சிகரத்தை தாண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
![]()