முச்சந்தி

கனகராயன்குளத்தில் மக்களின் காணிகளில் எல்லையிட்ட வனவளத் திணைக்களத்தினர்;  சத்தியலிங்கம் எம்.பி. நேரில் ஆய்வு

வவுனியா வடக்கு கனகராயன்குளத்தில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அத்துமீறி எல்லையிடப்பட்ட இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம் மற்றும் அதனை அண்மித்த மன்னகுளம், பெரியகுளம், பழையவிளாங்குளம் ஆகிய பகுதிகளிற்கே நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன்போது கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளருமாகிய தவேந்திரராசா ஆகியோரும் இணைந்திருந்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *