முச்சந்தி

மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் கிளிநொச்சியில் நாளை கருத்தாடல் அரங்கு

மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் கருப்பொருளில் கருத்தாடல் அரங்கு ஒன்று நாளை 4 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இக்கருத்தாடல் நிகழ்வில்மாகாணசபை அதிகாரங்களும் சவால்களும் எனும் தலைப்பில் ஓய்வுநிலை மூத்தநிர்வாக அதிகாரியும், சமூக ஆய்வாளருமான இரேனியல் செல்வின்,மாகாண சபையும் அதிகாரங்களும் எனும் தலைப்பில் பொறியியலாளர், ஓய்வு நிலைவிரிவுரையாளருமான கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார்மாகாண சபையும், மலையக மக்களின் வாய்ப்புகளும் எனும் தலைப்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறுவுனரும் சமூக ஆய்வாளருமான பெரியசாமி முத்துலிங்கம் ,மாகாண சபை முறைமை; தென்னிலங்கையின் தற்போதையமனநிலை எனும் தலைப்பில் ஆய்வாளர், கொள்கை பகுப்பாய்வாளருமான ஹரிந்திரா

பி. திசாநாயக்க, நிலையான தீர்வுக்கான படிக்கல்லாக மாகாண சபை எனும்தலைப்பில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையாசர்வேஸ்வரன் மாகாண சபையும் இன்றைய அரசியல் சூழலும் எனும் தலைப்பில்தினக்குரல்முன்னாள் பிரதம ஆசிரியர் வீரக்கத்தி தனபாலசிங்கம் ஆகியோர்

கருத்துரைகளை வழங்கவுள்ளனர். தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *