குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் இரண்டாம் நாளாக அகழ்வுப் பணி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி இரண்டாம் நாளாகிய நேற்று செவ்வாய் கிழமையும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தன . 1990 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபனின் முன்னிலையில் அகழ்வுப் பணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அகழ்வுப் பணி இரண்டாம் நாளாகிய நேற்று செவ்வாய்கிழமையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதன்போது குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டதுடன், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிசார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற அதிகாரிகள், உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
![]()