இலங்கை

சிறுமியர்களின் வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர், சிறுமியர்களின் வன்கொடுமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  (31) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு தமது உரிமைகள் சிறுவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ‘தமிழினத்தின் விழுப்பே விடுதலையின் முதற்படி’, ‘இராணுவ வெளியேறு’, ‘போதை வாஸ்து பாவனைகளை கட்டுப்படுத்து’ உள்ளிட்ட கோஷங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, சிறுவர்களின் பாதுகாப்பு, போதை வஸ்து ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *