இலங்கை

எரிபொருள் வழங்கிய மோடிக்கு அநுர நன்றி தெரிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் எரிசக்தி ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமாத திசாநாயக்க ஆகியோருக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரதிபலனாக குறி;த்த எரிபொருள் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா வழங்கிய துரித ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி தமது நன்றியை தெரிவித்துள்ளார்

இது கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இந்திய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது

நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக 20 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும18 ஆயிரம் மெட்ரிக்தொன் பெட்ரோல் இந்தியாவினால் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *